Monday, July 13, 2009

மாலை நேரம் - Aayirathil Oruvan

மாலை நேரம் .. மழை தூரும் காலம் .. என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன் ..
நீயும் நானும் .. ஒரு போர்வைக்குள்ளே சிறு மேகம் போலே மிதக்கிறேன் ..

ஓடும் காலங்கள், உடன் ஓடும் நினைவுகள், வழி மாறும் பயணங்கள் தொடர்கிறதே ..
இது தான் வாழ்கையா, ஒரு துணை தான் தேவையா, மனம் ஏனோ என்னையே கேட்கிறதே ..

ஓஹோ ..



காதல் இங்கே ஓய்ந்தது .. கவிதை ஒன்று முடிந்தது .. தேடும் போதே தொலைந்தது .. அன்பே ..
இது சோகம் ஆனால் ஒரு சுகம் .. நெஞ்சின் உள்ளே பரவிடும் .. நாம் பழகிய காலம் பரவசம் அன்பே ..

இதம் தருமே ..



உன் கரம் கோர்க்கையில் நினைவு ஓராயிரம் .. பின் இரு கரம் பிரிகையில் நினைவு நூறாயிரம் ..
காதலில் விழுந்த இதயம் மீட்க முடியாதது .. கனவில் தொலைந்த நிஜங்கள் மீண்டும் கிடைக்காதது ..

ஒரு காலையில் நீ இல்லை .. தேடவும் மனம் வரவில்லை ..
பிரிந்ததும் புரிந்தது .. நான் என்னை இழந்தேன் என ..

-காதல்

ஒரு முறை வாசலில் நீயாய் வந்தால் என்ன?
நான் கேட்கவே துடித்திடும் வார்த்தை சொன்னால் என்ன?

இரு மனம் சேர்கையில் பிழைகள் பொறுத்துக்கொண்டால் என்ன?
இரு திசை பறவைகள் இணைந்தே விண்ணில் சென்றால் என்ன?

என் தேடல்கள் நீ இல்லை ..
உன் கனவுகள் நான் இல்லை ..
இரு விழிப்பார்வையில் நாம் உருகி நின்றால் என்ன?

-மாலை நேரம்

4 comments:

Saravanan said...

na indha paatuku than aduthu ezhudhalam nu irunthen.. neeye ezhuthita.. ennoda favourite lines

உன் கரம் கோர்க்கையில் நினைவு ஓராயிரம் .. பின் இரு கரம் பிரிகையில் நினைவு நூறாயிரம் ..

Unknown said...

andrea vaazhga!

Rengaswami said...

Fav lines a adhulaye bold panten da .. So ippo comment nu enna panradhu .. sari oru kavidhai venaa solren
Mani kaaga ..

Kaadhal Tholvi Vaazhga!
Kavignar Vairamuthu Vaazhga!
Azhagiya Aval Vaazhga!
Andrea Akkavum Vaazhga!

Naresh said...

காதல் இங்கே ஓய்ந்தது .. கவிதை ஒன்று முடிந்தது .. தேடும் போதே தொலைந்தது .. அன்பே ..
இது சோகம் ஆனால் ஒரு சுகம் .. நெஞ்சின் உள்ளே பரவிடும் .. நாம் பழகிய காலம் பரவசம் அன்பே ..
இதம் தருமே ..


indha lines viri..

first linela, தேடும் போதே தொலைந்தது god level.. hmm..