Lyrics: Vaali
Singer: Hariharan
Music Director: Sundar C. Babu
உயிரில் பூக்கும் காதல் உணர்வின் ஆழ் நிலை
உணர்வை பார்ப்பது உறவின் சூழ் நிலை
காவல் கைதியாய் காதல் வாழும்
இருவரும் மீதிலும் இல்லையோர் பாவம்
எல்லாமே சந்தர்ப்பம்.. கற்பிக்கும் தப்பர்த்தம்..
உயிரில் ..
மனம் என்னும் குளத்தில் விழி என்னும் கல்லை முதன் முதல் எறிந்தாளே..
அலை அலையாக ஆசைகள் எழும்ப அவள் வசம் விழுந்தானே..
நதி வழி போனால் கரை வரக் கூடும் விதி வழி போனானே..
விதை ஒன்று போட வேரொன்று முளைத்த கதையென்று ஆனானே..
என் சொல்வது? என் சொல்வது?
தான் கொண்ட நட்புக்காக தானே தேய்ந்தான்
கற்பைப் போலே நட்பை காத்தான்
காதல் தோற்கும் என்றா பார்த்தான்
உலகில் எந்தக் காதல் உடனே ஜெயித்தது?
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது
நினைவுகளாலே நிச்சயதார்த்தம் நடந்தது அவனோடு..
அவனை அல்லாது அடுத்தவன் மாலை ஏற்பது பெரும் பாடு..
ஒரு புறம் தலைவன் மறு புறம் தகப்பன் இருகொல்லி ஏறும்பானாள்..
பாசத்துக்காக காதலை தொலைத்து ஆலையில் கரும்பானாள்..
யார் காரணம்? யார்?
யார் பாவம் யாரை சேரும் யார் தான் சொல்ல?
கண்ணீர் வார்த்தாள் கன்னி மானே
சுற்றம் செய்த குற்றம் தானே
உயிரில்..
4 comments:
மனம் என்னும் குளத்தில் விழி என்னும் கல்லை முதன் முதல் எறிந்தாளே..
அலை அலையாக ஆசைகள் எழும்ப அவள் வசம் விழுந்தானே..
நதி வழி போனால் கரை வரக் கூடும் விதி வழி போனானே..
விதை ஒன்று போட வேரொன்று முளைத்த கதையென்று ஆனானே..
என் சொல்வது? என் சொல்வது?
தான் கொண்ட நட்புக்காக தானே தேய்ந்தான்
கற்பைப் போலே நட்பை காத்தான்
காதல் தோற்கும் என்றா பார்த்தான்
padathoda kathaikku etha maari super'a irukku indha lines..
first two lines viri..
next two lines also good..
na inumm padam paakala da.. intha weekend pakanum..indha padathula innoru song iruku "ulagil entha kadhal" with the same lines but the order is changed.
naanum pakkala padam.. got to know the story but :)
unarvai parpadhedhu uravin soolnilai .. slight a artham maareechu .. range lyrics!!
Post a Comment