Lyrics: Na MuthuKumar
Singer: Prasanna
Music: GV Prakash/Vijay Antony
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை..
அவளுக்கு யாரும் இணையில்லை..
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை..
ஆனால் அது ஒரு குறையில்லை..
- அவள் அப்படி..
அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை ..
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை..
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை..
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை..
- அவள் அப்படி..
அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை..
நான் காவலிருந்தால் தடுக்கவில்லை..
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை..
நான் பொம்மை போலே பிறக்க வில்லை..
அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை..
அந்தக் காட்டில் தொலைந்தேன் மீளவில்லை..
அவள் கை விரல் மோதிரம் தங்கமில்லை..
கைப் பிடித்திடும் ஆசை.. தூங்கவில்லை..
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை..
எனக்கு எதுவுமில்லை ..
- அவள் அப்படி..
அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை..
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை..
அவள் திட்டும் போதும் வலிக்வில்லை..
அந்த அக்கறை போலே வேறு இல்லை..
அவள் வாசம்.. ரோஜா வாசமில்லை..
அவளில்லாமல் சுவாசமில்லை..
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை..
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை..
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை..
எனக்கு எதுவுமில்லை..
- அவள் அப்படி..
1 comment:
Diff aana viri song .. btw .. "aval bommaigal anaithu urangavillai .. naan bommai pole pirakkavillai .." indha maadiri simply (il)logical vishayangal la dhan pasanga vilaraanga nu oru feelingi .. ur take guys? Fraud?? Manni??
Post a Comment