Showing posts with label Avatharam. Show all posts
Showing posts with label Avatharam. Show all posts

Tuesday, July 28, 2009

Thendral Vanthu Theendum, Singer : Ilayaraja, Janaki Film : Avatharam, Year : 1985, Director : Naasar

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசில...
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல...
வந்துவந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா...
எண்ணங்களுக்கு ஏத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா...
உண்மை அம்மா உள்ளத நானும் சொன்னேன் பொன்னம்மா சின்னகன்னே...

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசில...
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல...

எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே இரு மனம் எதோ பேசுது
எவரும் சொல்லாமலே குயில் எல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது
ஓட நீரோட இந்த உலகம் அதுபோல
ஓடும் அது ஓடும் இந்த காலம் அதுபோல
நிலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசில...

ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்கிது
நேசம் பொறந்தாலே உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக ஆசைகள் உஞ்சல் ஆடுது
அலையும் அலபோலே அழகெல்லாம் கோலம் போடுது
குயிலே குயிலினமே அந்த இசையாய் கூவுதம்மா
கிளியே கிளிஇனமே அத கதையாய் பேசுதம்மா
கதையாய் விடுகதையாய் ஆவதில்லை அன்புதான்

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசில...
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்பில...
வந்துவந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா...
எண்ணங்களுக்கு ஏத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா...
உண்மையிலே உள்ளது என்ன என்ன வண்ணங்கள் என்ன என்ன

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசில...
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல...