Monday, July 13, 2009
மாலை நேரம் - Aayirathil Oruvan
நீயும் நானும் .. ஒரு போர்வைக்குள்ளே சிறு மேகம் போலே மிதக்கிறேன் ..
ஓடும் காலங்கள், உடன் ஓடும் நினைவுகள், வழி மாறும் பயணங்கள் தொடர்கிறதே ..
இது தான் வாழ்கையா, ஒரு துணை தான் தேவையா, மனம் ஏனோ என்னையே கேட்கிறதே ..
ஓஹோ ..
காதல் இங்கே ஓய்ந்தது .. கவிதை ஒன்று முடிந்தது .. தேடும் போதே தொலைந்தது .. அன்பே ..
இது சோகம் ஆனால் ஒரு சுகம் .. நெஞ்சின் உள்ளே பரவிடும் .. நாம் பழகிய காலம் பரவசம் அன்பே ..
இதம் தருமே ..
உன் கரம் கோர்க்கையில் நினைவு ஓராயிரம் .. பின் இரு கரம் பிரிகையில் நினைவு நூறாயிரம் ..
காதலில் விழுந்த இதயம் மீட்க முடியாதது .. கனவில் தொலைந்த நிஜங்கள் மீண்டும் கிடைக்காதது ..
ஒரு காலையில் நீ இல்லை .. தேடவும் மனம் வரவில்லை ..
பிரிந்ததும் புரிந்தது .. நான் என்னை இழந்தேன் என ..
-காதல்
ஒரு முறை வாசலில் நீயாய் வந்தால் என்ன?
நான் கேட்கவே துடித்திடும் வார்த்தை சொன்னால் என்ன?
இரு மனம் சேர்கையில் பிழைகள் பொறுத்துக்கொண்டால் என்ன?
இரு திசை பறவைகள் இணைந்தே விண்ணில் சென்றால் என்ன?
என் தேடல்கள் நீ இல்லை ..
உன் கனவுகள் நான் இல்லை ..
இரு விழிப்பார்வையில் நாம் உருகி நின்றால் என்ன?
-மாலை நேரம்
Wednesday, June 24, 2009
indha paadhai lyrics .. from aayirathil oruvan ...
இந்த பாதை எங்கு போகும்
இந்த தேடல் எங்கு சேர்க்கும்
நான் இங்கு கலந்தேன் ஒரு புயலில்
நான் ஒரு இலை தான் இந்த காட்டில்
முதலும் முடிவும் இல்லை..
இலக்குகள் எல்லைகள் இல்லை..
கரையின் தொல்லை கடலில் இல்லை..
கடலும் மறைந்தால் மனம் இல்லை..
ஆடி கூத்தாடி நீ திரிந்தால்
ஏது சோகம்
உலகை பார்த்து வாழ்ந்தால்
உன் வாழ்க்கை மெல்ல சாகும்
ஓடம் நதியில் போகும்..
நதியும் ஓடம் மேல் போகும்..
அழுவதும் சிரிப்பதும் உன் வேலை....
நடப்வை நடக்கட்டும் அவன் லீலை..
மரங்கள் இங்கு பேசும்..
பனி துளிகள் மாயம் காட்டும்
இதை நீ கொஞ்சம் உணர்ந்தால்
பிற உயிர்கள் உன்னை தொடரும்..
Sunday, June 21, 2009
Chandirane Suriyane - Amaran
Thursday, June 18, 2009
thaai thindra manne lyrics.. from aayirathil oruvan..
Listen to the song below..
எழுத்துப் பிழையிருந்தால் திட்டவும் ...
வைரமுத்துவின் அற்புதமான வரிகளில்..
தாய் தின்ற மண்ணே
இது பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்
தாய் தின்ற மண்ணே
பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்
நெல்லாடிய நிலமெங்கே?
சொல்லாடிய அவையெங்கே?
வில்லாடிய களமெங்கே?
கல்லாடிய சிலையெங்கே?
தாய் தின்ற மண்ணே
தாய் தின்ற மண்ணே
கயல் விளையாடும் வயல் வெளி தேடி
காய்ந்து கழிந்தன கண்கள்
காவிரி மலரின் கடிமணம் தேடி
கருகி முடிந்தது நாசி
சிலை வடி மேவும் உளி ஒலி தேடி
திருகி விழுந்தன செவிகள்
ஊன் பொதி சோற்றின் தேன் சுவை கருதி
ஒட்டி உலர்ந்தது நாவும்
புலிக் கொடி பொறித்த சோழ மாந்தர்கள்
எலிக் கறி பொறிப்பதுவோ?
காற்றை குடிக்கும் தாவரமாகி
காலம் கழிப்பதுவோ?
மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை
மன்னன் ஆளுவதோ?
மன்னன் ஆளுவதோ?
தாய் தின்ற மண்ணே
தாய் தின்ற மண்ணே
நொறுங்கும் உடல்கள்
பிதுங்கும் உயிர்கள்
அழுகும் நாடு
அழுகின்ற அரசன்
பழம் தின்னும் கிளியோ?பிணம் தின்னும் கழுகோ?
தூதோ? முன் வினை தீதோ?
களங்களும் அதிர களிறுகள் பிளிற
சோழம் அழைத்து போவாயோ?
தங்கமே என்னை தாய் மண்ணில் சேர்த்தால்
புரவிகள் போலே புரண்டிருப்போம்
ஆயிரம் ஆண்டுகள் சேர்ந்த கண்ணீரை
அருவிகள் போலே அழுதிருப்போம்
அதுவரை..
தமிழர் காணும் துயரம் கண்டு
தலையை சுற்றும் கோளே.. அழாதே!
என்றோ ஒரு நாள் விடியும் என்றே
இரவை சுமக்கும் நாளே.. அழாதே!
நூற்றாண்டுகளின் துருவை தாங்கி
உறையில் தூங்கும் வாளே.. அழாதே!
எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ
என்னோடழும் யாழே.. அழாதே!
நெல்லாடிய நிலமெங்கே?
சொல்லாடிய அவையெங்கே?
வில்லாடிய களமெங்கே?
கல்லாடிய சிலையெங்கே?
தாய் தின்ற மண்ணே
இது பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்
Wednesday, June 17, 2009
Ovvoru Pookalumae
Vaalvendraal poraadum porkalamey
Ovvaru pookalumaee sollkirathey
Vaalvendraal poraadum porkalamey
Ovvaru vidiyalumaee.. Sollkirathey
Iravaana paghal ondru vanthidumey
Nambikkai enbathu vendum... namm vaalvill
Lachiyam nichayam vellum oru naalill
Manamey ohh manamey nee maarividuu
Maleiyoo athu paniyoo nee mothividuu
Ullam endrum eppothumm
Udainthu pogha kudaathuu
Enna intha vaalkai endra
Ennam thondra kudaathuu
Enntha manitha nenjukkull
Kaayam illei sollungall
Kaalapokil kaayamellamm
Mareinthu poghum maayanghall
Uzhi thaangum karkhal thaaney
Mannmeethu silaiyaaghumm
Vali thaanghum ullam thaaney
Nileiyaana sugham kaanumm
Yaarukillei poraadamm
Kannil enna neerodamm
Oru kanavu kandaal.
Atha thinammuyindraal
Oru naalil nijamaaghumm
Manamey ohh manamey nee maarividuu
Maleiyoo athu paniyoo nee mothividuu
Ovvaru pookalumaee sollkirathey
Vaalvendraal poraadum porkalamey
Vaalkai kavithai vaasippom
Vaanam alavu yosippomm
Muyarchi enra ondrai maddum
Muchai pola swaasippom
Lacham kanavu kannodu
Lachiyangal nenjoduu
Unnei vella yaarumilleu uruthiyoda poraadu
Manithaa unn manatei kiri vithai podu maramaaghum
Avamaanam paduthollvi ellamey uravaaghumm
Thollvi indri varalaaraa.
Thukkam illei enn thozhaa
Oru mudivirinthaal.. Athil thelivirinthaal
Antha vaanam vasamaaghumm
Manamey ohh manamey nee maarividuu
Maleiyoo athu paniyoo nee mothividuu
Ovvaru pookalumaee sollkirathey
Vaalvendraal poraadum porkalamey
Ovvaru vidiyalumaee.. Sollkirathey
Iravaana paghal ondru vanthidumey
Nambikkai enbathu vendum... namm vaalvill
Lachiyam nichayam vellum oru naalill
Manamey ohh manamey nee maarividuu.
Maleiyoo athu paniyoo nee mothividuu..
Tuesday, February 17, 2009
அந்தாதி
Thursday, February 5, 2009
Kurunthokai poem used in Cinema Song
குறிஞ்சி - தலைவன் கூற்று
யாயும் ஞாயும் யாரா கியரோ,
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்,
யானும் நீயும் எவ்வழி யறிதும்,
செம்புலப் பெயனீர் போல,
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.
The meaning of the poem is
என் தாய் உன் தாயை எவ்வாறு அறிவாள்?
என் தந்தைக்கும் உன் தந்தைக்கும் என்ன உறவோ ?
நானும் நீயும் ஒருவரை ஒருவர் எவ்வாறு அறிந்துகொண்டோம் ?
இருந்தும் மழை நீர் செம்மையான நிலத்துடன் கலப்பது போல
கலந்து விட்டன அன்பு கொண்ட நம் நெஞ்சங்கள்
This poem has been used in two tamil cinema songs.
1. 'Narumagaye' song from Iruvar. Listen to the clip below.
யாயும் யாயும் யாராகியரோ, நெஞ்சு நேர்ந்ததென?2. 'Pattampoochi' song from Chitiram Pesuthadi. Listen to the clip below
யாயும் யாயும் யாராகியரோ,நெஞ்சு நேர்ந்ததென?
யானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்ததென?
ஒரே ஒரு தீண்டல் செய்தாய், உயிர்க்கொடி பூத்ததென்ன?
ஒரே ஒரு தீண்டல் செய்தாய், உயிர்க்கொடி பூத்ததென்ன?
செம்புலம் சேர்ந்த நீர்த்துளிபோல் அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன?
ஒற்றைத் திங்கள் முகமோ?PS: Everything is stolen from somewhere except 'Pattampoochi' song which I accidentally discovered.
கொன்றைப் பூக்கள் நகமோ?
என்னை கற்றைக் கூந்தலில் கட்டிப் போட்டாலே!
யாயும் நீயும் யாரோ?
எந்தை நுந்தை யாரோ?
செம்புல நீராய் ஒன்றாய் கலந்தோமே!