தாய் தின்ற மண்ணேஇது பிள்ளையின் கதறல்ஒரு பேரரசன் புலம்பல்தாய் தின்ற மண்ணேபிள்ளையின் கதறல்ஒரு பேரரசன் புலம்பல்நெல்லாடிய நிலமெங்கே?சொல்லாடிய அவையெங்கே?வில்லாடிய களமெங்கே?கல்லாடிய சிலையெங்கே?தாய் தின்ற மண்ணேதாய் தின்ற மண்ணேகயல் விளையாடும் வயல் வெளி தேடிகாய்ந்து கழிந்தன கண்கள்காவிரி மலரின் கடிமணம் தேடிகருகி முடிந்தது நாசிசிலை வடி மேவும் உளி ஒலி தேடிதிருகி விழுந்தன செவிகள்ஊன் பொதி சோற்றின் தேன் சுவை கருதிஒட்டி உலர்ந்தது நாவும்புலிக் கொடி பொறித்த சோழ மாந்தர்கள்எலிக் கறி பொறிப்பதுவோ?காற்றை குடிக்கும் தாவரமாகிகாலம் கழிப்பதுவோ?மண்டை ஓடுகள் மண்டிய நாட்டைமன்னன் ஆளுவதோ?மன்னன் ஆளுவதோ?தாய் தின்ற மண்ணேதாய் தின்ற மண்ணேநொறுங்கும் உடல்கள்பிதுங்கும் உயிர்கள்அழுகும் நாடுஅழுகின்ற அரசன்பழம் தின்னும் கிளியோ?பிணம் தின்னும் கழுகோ?தூதோ? முன் வினை தீதோ?களங்களும் அதிர களிறுகள் பிளிறசோழம் அழைத்து போவாயோ?தங்கமே என்னை தாய் மண்ணில் சேர்த்தால்புரவிகள் போலே புரண்டிருப்போம்ஆயிரம் ஆண்டுகள் சேர்ந்த கண்ணீரைஅருவிகள் போலே அழுதிருப்போம்அதுவரை..தமிழர் காணும் துயரம் கண்டுதலையை சுற்றும் கோளே.. அழாதே!என்றோ ஒரு நாள் விடியும் என்றேஇரவை சுமக்கும் நாளே.. அழாதே!நூற்றாண்டுகளின் துருவை தாங்கிஉறையில் தூங்கும் வாளே.. அழாதே!எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவஎன்னோடழும் யாழே.. அழாதே!நெல்லாடிய நிலமெங்கே?சொல்லாடிய அவையெங்கே?வில்லாடிய களமெங்கே?கல்லாடிய சிலையெங்கே?தாய் தின்ற மண்ணேஇது பிள்ளையின் கதறல்ஒரு பேரரசன் புலம்பல்
My favourite lines are என்றோ ஒரு நாள் விடியும் என்றேஇரவை சுமக்கும் நாளே.. அழாதே!நூற்றாண்டுகளின் துருவை தாங்கிஉறையில் தூங்கும் வாளே.. அழாதே!
ஊன் பொதி ..புரவிகள் .. களிறுகள் .. meaning?
புரவி na kuthirai..களிறு na yaanai..ஊன் na flesh so ஊன் பொதி na Meatnu nenaikren.. not sure..
பொதி Means bag/ mootai...ஊன் means Body/ Udal...ஊன் பொதி na Udalin mootai, meaming Stomach...In the song it means like, "in search of food tongue became thin and dry...."....
bread 6
Post a Comment
5 comments:
My favourite lines are
என்றோ ஒரு நாள் விடியும் என்றே
இரவை சுமக்கும் நாளே.. அழாதே!
நூற்றாண்டுகளின் துருவை தாங்கி
உறையில் தூங்கும் வாளே.. அழாதே!
ஊன் பொதி ..புரவிகள் .. களிறுகள் .. meaning?
புரவி na kuthirai..
களிறு na yaanai..
ஊன் na flesh so ஊன் பொதி na Meatnu nenaikren.. not sure..
பொதி Means bag/ mootai...
ஊன் means Body/ Udal...
ஊன் பொதி na Udalin mootai, meaming Stomach...
In the song it means like, "in search of food tongue became thin and dry...."....
bread 6
Post a Comment