Note : Weirdly enough almost all our songs listed here are related to remaans. Or maybe its not weird enough. This is a chic centri song but very very strong lyrics.
Avril lavigne avargal ayanavarathil pirandhirundhal ivvaru paadalgal ezhudhiyirukalam endru enna thondrugiradhu.
மலர்களே!
மலர்களே!!
மலர வேண்டாம் - உறங்கிடுங்கள்!
அவசரம் எதுவுமே இன்று இல்லை - ஓய்வெடுங்கள்!
நெஞ்சத்தின் உள்ளே அழைத்து வந்து
என்னை விருந்து கொடுத்து விட்டேன்!
வம்பு செய்திகள் சுவைத்துக் கொண்டு
சிறித்து, முறைத்து, விருப்பம் போலே வாழ!
மலர்களே!
மலர்களே!!
மலர வேண்டாம் - உறங்கிடுங்கள்!
அவசரம் எதுவுமே இன்று இல்லை - ஓய்வெடுங்கள்!
ஆடைகள் சுமை தாண்டி
அதை முழுதும் நீக்கி விட்டுக் குளித்தேன்!
யாரேனும் பார்ப்பார்கள் என்று
கவலை ஏதும் இன்றிக் கழித்தேன்!
குழந்தை என மீண்டும் மாறும் ஆசை
அது எல்லோர்க்கும் இருக்கிறதே!
சிறந்த சில நொடிகள் வாழ்ந்துவிட்டேன்
என் உள்ளம் சொல்கிறதே!
அழைக்கிற குரலுக்கு வந்துவிடவே - அட
இங்கு பணிப்பெண்கள் யாருமில்லையே!
இந்த விடுதலைக்கு இணையின்று ஏதுமில்லையே - அடடா
கண்டேன் எனக்குள் ஆதிவாசி!
மலர்களே!
மலர்களே!!
மலர வேண்டாம் - உறங்கிடுங்கள்!
அவசரம் எதுவுமே இன்று இல்லை - ஓய்வெடுங்கள்!
chorus
நீரோடு ஒரு காதல்
கடல் அலையில் கால் நனைய நடப்பேன்!
ஆகாயம் என்னைப் பார்க்க
மணல் வெளியில் நாள் முழுதும் கிடப்பேன்!
புதிய பல பறவைக் கூட்டம் வானில்
பறந்துப் போகிறதே!
சிறகு சில உதிர்த்து நீயும் வா வா
என்றேதான் அழைக்கிறதே!
முகத்துக்கு ஒப்பனைகள் தேவை இல்லையே!
முகம் காட்டும் கண்ணாடிக்கு வேலை இல்லையே!
அசடுகள் வழிந்திட ஆண்கள் இல்லையே!
காலம் நேரம் கடந்த ஞான நிலை
மலர்களே!
மலர்களே!!
மலர வேண்டாம் - உறங்கிடுங்கள்!
அவசரம் எதுவுமே இன்று இல்லை - ஓய்வெடுங்கள்!
1 comment:
nalla paadal ondrai koorineergal thalabadhiyaarae....indru mudhal nam avaiyil romance, remaans erandu vaarthaigalum thadai seiyyappadugiradhu...indru mudhal romaanchac mattumae ubayogikkumaaru mannarin aanai...
indha paadal lyrics pottadhu..pattathu raaniyai mayakku thangilin sadhi endru mannar arivaar...adhanaal..inimelum pengalai vasigarikkum paadalgalai inga arangetrinaal thangalin kambu thundikka padum...adhavadhu thangal veetin minsaara kambu thundikka padum endru therivaapadhu endhan kadamai
Post a Comment