இரு விழிகளும் விழிகளும் இணைத்தன
இரு இமைகளும் இமைகளும் திகைத்தன
ஒரு வேதியல் மாற்றம் நேருதே
தட்பம் வெட்பம் தடுமாறுதே.... ஹே ஹே ஹே ஹே
மழைச்சாரலோ என் நெஞ்சிலே
சுகமாய் கீறலோ என் உயிரிலே
மழைச்சாரலோ என் நெஞ்சிலே
சுகமாய் கீறலோ என் உயிரிலே
இதுக் கீறலா மழைச்சாரலா
இதுக் காதலா இளவேனிலா
இது மீறலா பரிமாறலா
இதுக் காதலா கண் மோதலா
யாரிடமும் தோன்றவில்லை இதுபோல் நான் எனது ஏதும் இல்லை இனிமேல்
யாரிடமும் தோன்றவில்லை இதுபோல் நான் எனது ஏதும் இல்லை இனிமேல்
நான் கண்கள் மூடியும் பார்க்கிறேன்.....
ஒரு தென்றல் தீண்டியும வேர்க்கிறேன் .....
நான் கண்கள் மூடியும் பார்க்கிறேன் ஒரு தென்றல் தீண்டியும வேர்க்கிறேன்.....
கார்மேகம் வந்து மோதியே ஒரு வின்மீன் இன்று சில்லுச்சில்லாய் சிதறுதே...
ஒரு வின்மீன் இன்று சில்லுச்சில்லாய் சிதறுதே
யாரிடமும் தோன்றவில்லை இதுபோல் நான் எனது ஏதும் இல்லை இனிமேல்
இதுக் கீறலா மழைச்சாரலா
இதுக் காதலா இளவேனிலா
இது மீறலா பரிமாறலா
இதுக் காதலா கண் மோதலா
மழைச்சாரலோ என் நெஞ்சிலே
சுகமாய் கீறலோ என் உயிரிலே
நான் அறியாமல் எனை ரசித்தாய் என் மௌனங்களை மொழிப்பெயர்த்தாய்
உன்னை கண்ட பின்னே எந்தன் பெண்மைகளும் உயிர்ப்பெறுதே
கண்ணா மூச்சி ஆட்டம் போட்ட வெட்கங்களும் வெளிவருதே
கனவில் நின்ற போதும் மிதக்கிறேன் அணைத்திட நீளும் கையை அடக்கினேன்
என்னை தந்து உன்னை வாங்க வந்தேனே இளவேனில் காற்றின் வெட்பம் தாக்க நின்றேனே
யாரிடமும் தோன்றவில்லை இதுபோல் நான் எனது ஏதும் இல்லை இனிமேல்
யாரிடமும் தோன்றவில்லை இதுபோல் நான் எனது ஏதும் இல்லை இனிமேல்
நான் கனவுகளை கண்டதில்லை கனவாய் யாரிடமும் சென்றதில்லை
முன்னே பின்னே பார்த்ததில்லை இருந்தும் மனம் உனை நாட
முன்னூர் ஆண்டு ஒன்றாய் வாழ்ந்த ஞாபகத்தில் தடுமாற
விரல்களும் மோதிரங்கள் நீக்கினேன் உன் விரல் தேடி வந்து கோர்க்கிறேன்
இந்தச் சொல்லும் இந்தக் கணமும் நிக்கட்டும்
நமை வானம் வந்து ஈரக் கையால் வாழ்த்தட்டும்
யாரிடமும் தோன்றவில்லை இதுபோல் நான் எனது ஏதும் இல்லை இனிமேல்
நான் கண்கள் மூடியும் பார்க்கிறேன்.....
ஒரு தென்றல் தீண்டியும வேர்க்கிறேன் .....
நான் கண்கள் மூடியும் பார்க்கிறேன் ஒரு தென்றல் தீண்டியும வேர்க்கிறேன்.....
கார்மேகம் வந்து மோதியே ஒரு வின்மீன் இன்று சில்லுச்சில்லாய் சிதறுதே...
ஒரு வின்மீன் இன்று சில்லுச்சில்லாய் சிதறுதே
ஒரு வின்மீன் இன்று சில்லுச்சில்லாய் சிதறுதே
சில்லுச்சில்லாய் சில்லுச்சில்லாய் சிதறுதே
1 comment:
god level lyrics... thnx for posting it nu sollanum.. indha song ozhunga kettadhe illa lyrics wise..
இது மீறலா பரிமாறலா
நான் கண்கள் மூடியும் பார்க்கிறேன்.....
ஒரு தென்றல் தீண்டியும வேர்க்கிறேன் .....
என் மௌனங்களை மொழிப்பெயர்த்தாய் (romba azhagana line)
கண்ணா மூச்சி ஆட்டம் போட்ட வெட்கங்களும் வெளிவருதே
இந்தச் சொல்லும் இந்தக் கணமும் நிக்கட்டும்
indha lines ellam super..
Post a Comment